ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி
ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதி
By : King 24x7 Website
Update: 2024-01-09 06:45 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நிலையம், சென்னையை இணைக்கும் வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய முக்கிய மாவட்டங்களுடனும் இணைக்கிறது. மேலும் விருதுநகர் வழியாக வடக்கு நோக்கி மதுரைச் செல்லும் அகல இருப்புப் பாதை, தென்காசி வழியாக மேற்கு நோக்கி கொல்லம் செல்லும் அகல இருப்புப் பாதை ஆகிய மிக முக்கிய வழித்தடங்களையும் இணைக்கும் ஒரு ரயில் நிலையமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் நாள்தோறும் பணிக்காகவும், தொலைதூரப் பயணத்திற்காகவும் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் போதிய நிழல் குடை வசதி இல்லாத காரணத்தினால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் கழிப்பறையும் முறையாக பராமரிக்கப்படாமல் மூடப்பட்டு இருப்பதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.