POCSO வழக்கில் கடும் தண்டனை – குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை.

நாமக்கல், மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் 15 வயது சிறுமிக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு கடும் தண்டனை விதித்து நாமக்கல் மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.;

Update: 2026-01-28 15:12 GMT
இவ்வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரங்கன் (50) என்பவருக்கு, குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டம் (POCSO Act) கீழ் 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை மற்றும் அரசு தரப்பு முன்வைத்த உறுதியான சாட்சியங்களின் அடிப்படையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எவ்வித தளர்வும் இல்லை என்றும், சமூகத்தில் தடுப்பு நடவடிக்கையாக இத்தகைய கடும் தண்டனைகள் அவசியம் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பு, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

Similar News