போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி
பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-03-03 11:47 GMT
போலியொ சொட்டு மருந்து
நாமக்கல் மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில், இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. ஆவரங்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், நடைபெற்ற முகாமினை பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோர் துவக்கி வைத்தனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.