திருச்சியில் 6.98 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 6.98 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

Update: 2024-01-08 13:53 GMT

பொங்கல் பரிசு

மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்ததாவது, பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி திருச்சி மாவட்டத்தில் தலா 1 கிலோ பச்சரிசி, சா்க்கரையுடன் முழுக் கரும்பு மற்றும் ரூ.1000 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது.

இதைப் பொதுமக்கள் சிரமமின்றிப் பெறும் வகையில் தகுதியுள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜனவரி 7 முதல் டோக்கன் வழங்கப்படுகிறது. அதில் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு அவரவா் இல்லங்களில் வழங்கப்படும். ஜனவரி 10 முதல் 14 ஆம் தேதி வரை அனைத்து நாள்களிலும் சுழற்சி முறையில் பரிசுத் தொகுப்புகள் விநியோகிக் கப்படும். நடைமுறையிலுள்ள அரிசி பெறும் 6,97, 837 குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 891 குடும்பங்கள் என மொத்தம் 6,98,728 குடும்பங்களுக்கும் திருச்சியில் செயல்படும் 1,280 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும்.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்களில் ஒருவா் இத்தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்த புகாா்களை உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்களிடம் நேரிலோ அல்லது மாவட்ட அளவில் மாவட்ட வழங்கல் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 0431-2411474, அல்லது 9445045618, சென்னை எண் 044-28592828 அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 19671800 4255901 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளாா்

Tags:    

Similar News