நன்கொடை வழங்க கியூ.ஆர். கோடு வசதி

Update: 2024-01-09 06:35 GMT

நன்கொடை வழங்க கியூ.ஆர். கோடு வசதி

பக்தர்கள் வசதிக்காக பழனி கோவிலில் நாள் தோறும் அன்னதான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில் கியூ.ஆர்.கோடு வசதி உள்ள நிலையில் பழனி கோவிலிலும் இது போன்ற வசதி தொடங்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு தைப்பூசத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் பழனி மலைக்கோவிலில் கியூ.ஆர்.கோடு மூலம் நன்கொடை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News