தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு
தூத்துக்குடி அருகே தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-04-14 14:54 GMT
ஆண் சடலம் மீட்பு
தூத்துக்குடி அருகே உள்ள கீழசெக்காரக்குடி கிராமம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் முருகன் (46). இவர் கடந்த 11ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், இன்று காலை அங்குள்ள முனியசாமி கோவில் அருகில் உள்ள ஒரு தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தட்டப்பாறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகன் எப்படி இறந்தார்? குளிக்கும் போது கால் தவறி உள்ளே விழுந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.