தனிநபர் பிடியில் இருந்த ஊராட்சி கிணறு மீட்பு
பழனி, கோதைமங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான கிணறு மற்றும் அருகிலிருந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்த நிலையில், அதிகாரிகள் மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட்டனர்.;
Update: 2024-06-08 06:51 GMT
பழனி, கோதைமங்கலம் ஊராட்சிக்கு சொந்தமான கிணறு மற்றும் அருகிலிருந்த நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்த நிலையில், அதிகாரிகள் மீட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட்டனர்.
பழனி கோதைமங்கலம் ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள இடத்தை ராசாமணி என்பவர் நீண்ட நாட்களாக ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி அதிகாரிகள் இன்று ஆய்வு செய்து கிணற்றை மீட்டனர். மேலும், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துச் சென்று ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.