மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணம் - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு ஏக்கருக்கு 40,000 நிவாரணம் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
Update: 2023-10-31 05:11 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தில் உள்ள கொளத்தூர் கூடலூர் இழுப்பக்குடி சாத்தனூர் பிலிமிசை உள்ளிட்ட பத்து கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கையில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் தற்பொழுது பருவமழை போதுமான நேரத்தில் பெய்யாததால் வறட்சியால் மக்காச்சோள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர், மேலும் கையில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகளை வைத்து கடன் பெற்று விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளதால், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் வறட்சி பகுதியாக அறிவித்து, ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபாய் வரட்சி நிவாரணம் இழப்பீடு, வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்து ஆட்சியரிடம் மனு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.