புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, நினைவேந்தல்

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2024-02-15 17:11 GMT

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு, நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் NCC அமைப்பு சார்பில், காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) குமாரவேலு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். NCC அலுவலர் லெப்டினன்ட் சவுந்திரராஜன் புல்வாமா தாக்குதல் குறித்தும், இந்திய ராணுவத்தின் துல்லியமான பதில் தாக்குதல் குறித்தும் மாணவ மாணவிகளிடம் எடுத்துரைத்தார். அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட 450க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உயிரிழந்த நமது ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முடிவில் அனைவரும் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை என்இசிசி அலுவலர் லெப்டினன்ட் சவுந்திரராஜன் மற்றும் சேலம், 12 வது தமிழ்நாடு பட்டாலியன் இணைந்து செய்திருந்தனர்.
Tags:    

Similar News