கந்திலி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்
கந்திலி அருகே நெடுஞ்சாலைக்கு செந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்து சொந்தம் கொண்டாடியதை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் உள்ள கெஜல்நாயக்கன் பட்டி பகுதியில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்து பொதுமக்களுக்கு மற்றும் போக்குவரத்துக்கும் இடையூர் செய்து பல வாகன விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு வந்தது.
இதை குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பை அகற்ற கோரி புகார் மனு அளித்து வந்தனர் இந்நிலையில் நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோட்ட பொறியாளர் முரளிதலைமையில் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் நித்தியா நந்தம் மற்றும் உதவி கோட்ட பொறியாளர் மணி சுந்தரம் மற்றும் RI இளங்கோ மற்றும் காவல் ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் 20 மேற்ப்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி விட்டனர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது