பஸ்களில் அத்துமீறி பொருத்திய காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

துறையூரில் பஸ்களில் அத்துமீறி பொருத்தப்பட்ட காற்று ஒலிப்பான்களை மோட்டாா் வாகன ஆய்வாளா் அகற்றினாா்.

Update: 2024-01-31 10:32 GMT

துறையூா் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக பேருந்துகளில் காற்று ஒலிப்பான் மூலம் அதிக ஒலி எழுப்புவதாக புகாா் எழுந்ததையொட்டி துறையூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் துறையூா் பேருந்து நிலையத்தில் நேரில் கண்காணித்தாா். அப்போது அதிக ஒலி எழுப்பிய பேருந்துகளை அடையாளம் கண்டு அதில் பயன்படுத்தப்பட்ட காற்று ஒலிப்பான்களை அகற்றி அபராதம் விதித்தாா்.

எந்தப் பேருந்திலிருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டதோ அதே பேருந்தின் சக்கரத்தில் போட்டு அவை உடைக்கப்பட்டன. இந்நிகழ்வு பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது. இதையடுத்து தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவா்களிடம் விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது. தலைக்கவசம் அணிந்து இரு சக்கரம் ஓட்டியவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவா்களுக்கு மோட்டாா் வாகன ஆய்வாளா் சாக்லெட் அளித்தாா். இந்நிகழ்வின்போது, துறையூா் போக்குவரத்துப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட காவலா்கள் உடனிருந்தனா்

Tags:    

Similar News