தள்ளுவண்டி கடைகள் அகற்றம்: விசிக மாவட்ட செயலாளர் முற்றுகை
ராசிபுரம் நகரப் பகுதிகளில் சாலையோர தள்ளு வண்டி கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து நகராட்சியை விசிக மாவட்ட செயலாளர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி பகுதிகளான புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், கடைவீதி, பட்டணம் ரோடு உள்ளிட்ட சாலையோர பகுதிகளில் வியாபாரிகள் காய்கறி, பழங்கள், பூக்கள் கடை, கம்மங்கூழ் உள்ளிட்டவற்றை வியபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராசிபுரம் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனை அறிந்த விசிக., நாமக்கல் கிழக்கு மற்றும் மத்திய மாவட்ட செயலாளர்களான மும்பை அர்ஜூன், அவர்கள் மற்றும் நீலவனத்துநிலவன் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள், கட்சியினருடன் ராசிபுரம் நகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராசிபுரம் நகரப் பகுதிகளில் சந்துகடை, லட்டரி உள்ளிட்டவை படுஜோராக நடக்கும் போது, சாலையோரத்தில் எழை, எளிய வியாபாரிகள் வியாபாரம் செய்வதில் என்ன தவறு எனக் கேட்டு நகராட்சி ஆணையர் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் நிறைய உள்ளது எனவே முதலில் நகராட்சி அதிகாரிகள்,
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அதன் பிறகு இது போன்ற பாதசாரி வியாபாரிகள் 100க்கும் 200க்கும் பிழைப்பு நடத்தும் இவர்களிடத்தில் நீங்கள் அகற்றுவது பற்றி பின்பு பேசிக் கொள்ளலாம் எனவும் ஆணையர் இடம் எடுத்துக் கூறி கோரிக்கை வைத்தனர். நகராட்சிக்குட்பட்ட இடங்களில் முதலில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு இது போன்ற கடைகளுக்கு அதிகாரிகள் வரவேண்டும்,
தொடர்ந்து இவர்களுக்கு இடையூறுகள் தொல்லைகள் நகராட்சி அதிகாரிகளால் ஏற்பட்டால் கட்சியின் சார்பிலும், வியாபாரிகள் சார்பிலும் போராட்டம், சாலை மறியல் போன்றவை செய்ய நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.