கோடை விழாவில் இலவசமாக வாகனங்கள் பழுதுபார்ப்பு

கோடை விழாவில் இலவசமாக வாகனங்கள் பழுதுபார்ப்பில் ஈடுப்பட்ட எப பணியாளர்களுக்கு கலெக்டர் பிருந்தாதேவி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2024-05-27 09:27 GMT

பாராட்டிய போது 

ஏற்காடு கோடை விழா-மலர் கண்காட்சியையொட்டி சேலம் மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இலவச வாகன பழுதுபார்க்கும் முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. சுற்றுலா பயணிகளின் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள் திடீரென பழுது ஏற்பட்டால் அவர்களது இடத்திற்கு மெக்கானிக் தொழிலாளர்கள் நேரடியாக சென்று இலவசமாக சரி செய்து கொடுத்தனர்.

கடந்த 22-ந் தேதி முதல் நேற்று வரை 5 நாட்களில் சுற்றுலா பயணிகள் சுமார் 600 பேரது வாகனங்களின் பழுது நீக்கப்பட்டுள்ளது. டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்க நிர்வாகிகளின் இந்த சேவையை பாராட்டி அவர்களை கவுரவிக்கும் வகையில் ஏற்காடு ஏரி பூங்காவில் நேற்று மாலை நடந்த நிறைவு விழாவில் கலெக்டர் பிருந்தாதேவி, அவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் தேவராஜன், பொருளாளர் கந்தசாமி, துணைத்தலைவர் வடிவேல், துணை செயலாளர் சக்திவேல் உள்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News