மயிலாடுதுறை அருகே மாற்றுப் பாலம் சேதம்: மாணவர்கள் பாதிப்பு

Update: 2023-11-18 07:39 GMT

மாற்றுப் பாலம் சேதம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை அருகே, காளி வழியாக மணல்மேடு செல்லும் பாதையில், கன்னியாக்குடி, நமச்சிவாயபுரம் இடையே, பழவாற்றுப் பாலம் புதிதாக கட்டப்பட்டுவறுகிறது. இதற்கு அருகில், மாற்றுப் பாலம் அமைத்துள்ளனர், கடந்த 4 தினங்களுக்குமுன்பு, பெய்த மழையால், மாற்றுப் பாலம் சரிந்து, போக்குவரத்து தடைபட்டுவிட்டது.

இதனால், அரசுப் பேருந்துகள், மினிபேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டது. நமச்சிவாயபுரத்தின் வழியாக, செல்லக்கூடிய மாணவர்கள் உட்பட அனைத்துப் பொதுமக்களும் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு மாதத்திற்குமேலும், மழை இருப்பதால், உடனடியாக மாற்றுப் பாலத்தை, சரிசெய்துதர, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News