22 சதவீதம் வரை ஈரப்பதமுடைய நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை
திருவாரூரில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-02-01 11:26 GMT
கொள்முதல் நிலையங்களில் 17% வரை ஈரப்பதம் கொண்ட நெல் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஈரப்பதத்துடன் நெல்லை கொண்டு சென்றாலே திருப்பி அனுப்பப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் கடும் சிரமத்திற்கு மத்தியில் நெல் விளைவித்த விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவித்த பொழுது 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.விவசாயிகளின் சிரமத்தை கவனத்தில் கொண்டு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்தனர்.