எடப்பாடி அருகே பொதுமக்கள் கழிப்பிட வசதி கேட்டு கோரிக்கை

எடப்பாடி ஒன்றியம்9 வது வார்டில் சாக்கடை மற்றும் சாலைவசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.

Update: 2024-02-09 13:53 GMT


எடப்பாடி ஒன்றியம்9 வது வார்டில் சாக்கடை மற்றும் சாலைவசதி செய்து தர கோரிக்கை விடுத்தனர்.


எடப்பாடி ஒன்றியம் ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமம் 9வது வார்டில் கழிப்பிட வசதி உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை

.  சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் ஆவணிப்பேரூர் கீழ்முகம் கிராமம் 9வது வார்டு அண்ணா நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு பொது கழிப்பிட வசதிக்காக  கட்டப்பட்ட  கட்டிடத்தை இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படாமல் சிதலமடைந்து உள்ளது என்று.  இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்திலும், அரசியல் பிரமுகர்களிடத்திலும்புகார் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டிய அப்பகுதி பொதுமக்கள்.   சாக்கடை மற்றும் சாலைவசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர் . 

இது சம்பந்தமாக அக்கிராம ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டபோது ஒரு வார காலத்திற்குள் அதனை சரி செய்து தருவதாக கூறியுள்ளதாகவும் இதே நிலை நீடித்தால் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.  சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது...

Similar News