புதுக்கோட்டை சூழல் பூங்கா பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

Update: 2023-11-24 06:30 GMT

சூழல் பூங்கா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை நகரில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ரூ. 9 கோடி மதிப்பில் சூழல் பூங்கா பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் (2020) பணிகள் தொடங்கப்பட்டு, சுமார் 3 ஆண்டுகளாகி விட்டதால் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை நகரில் சத்தியமூர்த்தி சாலையில், கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே, அவ்வப்போது தற்காலிகப் பேருந்து நிறுத்தமாகப் பயன்படுத்தப்பட்ட 5 ஏக்கர் காலி இடத்தில் இந்தப் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020-இல் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் (ஐயுடிஎம்) ரூ. 9 கோடி மதிப்பில் இதற்கான திட்டம் முடிவு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. புதுக்கோட்டை நகரின் பழைமையான காந்திப் பூங்காவுடன், மன்னர் காலத்துக்குப் பிறகு உருவான விரிவாக்கப் பகுதிகள் அனைத்திலும் பூங்காக்கள் உள்ளன.விரிவாக்கப் பகுதிகளின் பூங்காக்கள் பராமரிப்பின்றிக் கிடக்கின்றன. காந்திப் பூங்காவுடன், ராணியார் பள்ளி வளாகத்துக்கு அருகே உருவாக்கப்பட்ட 'வைபை' பூங்காவிலும் சனி, ஞாயிறு மட்டுமல்லாது வேலைநாள்களின் நேரங்களிலும் கூட கூட்டம் நிரம்பி வழிவது, பொழுதுபோக்குத் தேவையைக் காட்டுகின்றன. இந்தச் சூழலில்தான் ரூ. 9 கோடி மதிப்பில் இத்தனைப் பூங்காவின் அவசியப்பட்டிருக்கிறது. பெரிய தேவை சிறுவர்களுக்கான ஸ்கேட்டிங், சைக்கிளிங் தளம், பெரியோர்கள் பயன்படுத்தும் நடைப்பயிற்சித் தளம், கணிதப் பூங்கா, அறிவியல் பூங்கா, அரைவட்ட திறந்தவெளி அரங்கு இவற்றுடன் அன்னாசி, தர்ப்பூசணி, ஆப்பிள், செர்ரி போன்ற பழங்களின் வடிவில் அமரும் இருக்கைகள், யானை, வண்ணக் கிளி, மயில் போன்ற பறவைகளின் மாதிரிகளும் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News