ஜானகியம்மாள் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க கோரிக்கை
முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கவேண்டும் என்பது குறித்த மனுவிற்கு பதிலளித்துள்ள செய்தி மக்கள் தொடர்பு இயக்குநரகம், இதுகுறித்து அரசு கொள்கை முடிவு எடுக்கவேன்டும் என தெரிவித்துள்ளது.
தூத்துக்குடிகீழச்சண்முகபுரம் பிராப்பர் தெரு மனிதநேய பண்பாளர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சத்யா இலட்சுமணன் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு இயக்குநருக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது "தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் பிறந்தநாளான நவம்பர் 30ந்தேதியை அரசு விழாவாக அறிவிக்கவும், சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படத்தை திறந்துவைக்கவும் கேட்டுக்கொண்டார்.
அந்த மனுவிற்கு இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புமற்றும் அரசு துணைச் செயலாளர் அலுவலரால் அளிக்கப்பட்ட பதிலில் முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சத்திரன் பிறந்தநாளான நவம்பர் 30ம் தேதியை அரசு விழாவாக அறிவிப்பது அரசின் கொள்கை முடிவாகும், என்ற விபரமும், ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப்படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைக்கும் தங்களது கோரிக்கை சட்டமன்றத்தைச் சார்ந்ததால், தங்களது கடிதம் சட்டமன்ற பேரவைச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்ற விபரத்தை தெரிவித்தது.