மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

தூத்துக்குடி மின்வாரியத்தில் காலி பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-05-31 06:43 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடியில் தடையில்லா மின்சாரம் இல்லாமலும், பழுதை உடனடியாக சரி செய்யாமலும், பொதுமக்கள் தொடர்ச்சியாக அவதியுற்று வருகிறார்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ் அப் கம்ப்ளைன்ட், ஆபீஸ் ரெக்கார்ட் ப்யூஸ் ஆஃப் கால், பிரேக் டவுன் வொர்க் 24 நேரமும் சரி செய்வது, பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுவது, மின் கம்பம் பராமரிப்பு பணிகள் ( HT & LT ), விஸ்தரிப்பு பணிகள் ( மரம் வெட்டுதல் ), டிரான்ஸ்பார்மர் ஆயில் ஊற்றும் பணி, இரவு நேரங்களில் peak hour ல் fuse ஆகும் போது feeder fuse, H fuse போட்டு தடை இல்லா மின்சாரம் வழங்குவது, TCW, work கள் செய்து கம்பம் நடுதல் பணிகள் தெரு விளக்குகளை சரி செய்வது, மின் கம்பம் நடுவது, 3 phase meter மற்றும் 1 phase meter சரி செய்வது மற்றும் புதிதாக மின் இணைப்பு கொடுப்பது போன்ற பணிகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே அயராது தன் உயிரையும் பணைய வைத்து பணியாற்றி வருகிறார்கள்.

Advertisement

இவர்களின் பற்றாக்குறையை இன்று பொதுமக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யாத ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு மின்வாரிய சேர்மன் அலுவலகத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களின் காலிப்பணியிடங்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு காலி பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய மின் உற்பத்தி மற்றும் விநியோக வட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News