அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் இந்து சமய பேரவை வலியுறுத்தப்படுள்ளது.

Update: 2023-12-04 08:57 GMT

ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என திருவண்ணாமலையில் நேற்று நடந்த இந்து சமய பேரவை மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி

ருவண்ணாமலையில் ஒரு தனியார் ஓட்டல் அரங்கில் இந்து சமய பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் என். சௌந்தரராஜன் மாவட்ட துணை தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்க மாநில துணை தலைவர் கே.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் தேசிய தலைவர் எஸ். சுந்தர்ஜி கலந்துகொண்டு வளைதளத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் 2024ஆம் ஆண்டு இந்து சமய பேரவை சார்பில் குறைந்தபட்சம் ஒரு கோவிலில் திருவிளக்கு வழிபாடு நடத்திட வேண்டும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்து சமய வகுப்புகள் துவங்கப்படவேண்டும் இந்து சமய பேரவையில் தற்போதுள்ள 5500 உறுப்பினர்கள் எண்ணிக்கையினை 10 மடங்காக அதிகப்படுத்தி 5000 உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

8இந்த கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் ஏ.சிவஜோதி மாவட்ட துணை தலைவர் ராம்குமார் மாவட்ட இளைஞரணி தலைவர் பாலாஜி மாவட்ட இளைஞரணி துணை தலைவர் பி.சிவா உள்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொதுச் செயலாளர் எம்.அரிபிரபா நன்றி கூறினார்.

Tags:    

Similar News