தூத்துக்குடி : வழக்கறிஞர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க கோரிக்கை
பேரிடரால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்களுக்கு வழக்கறிஞர்கள் சேமநல நிதியில் இருந்து ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2023-12-24 02:06 GMT
சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பின் அமைப்பாளர் வழக்கறிஞர் அதிசயகுமார் பார் கவுன்சில் ஆப் தமிழ்நாடு & புதுச்சேரி தலைவருக்கு அனுப்பியுள்ள மனுவில், "கடந்த 17-12-2023 அன்று பெய்த தொடர் மழையினால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூத்த - இளம் வழக்கறிஞர்கள் தங்களது வீடு, வாகனம் மற்றும் உடைமைகள் இழந்து எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்கள் இயல்பு நிலை திரும்புவதற்கு இன்னும் 6 மாத காலமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப இயலாமல் பரிதவித்து வருகின்றனர். வழக்கறிஞர்களின் பேரிடரை போக்க வழக்கறிஞர்கள் சேம நல நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கி வழக்கறிஞர்கள் வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது தங்களின் கடமையும் அவசியமுமாகிறது. ஆகவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பூர்த்திச் செய்ய வழக்கறிஞர்களின் சேம நல நிதியில் இருந்து ரூ. 1,00,000/- வழங்கும் படி கேட்டுக் கொள்கின்றோம். என்று தெரிவித்துள்ளார்.