பொங்கலுக்கு இலவச மண்பானை வழங்க கோரிக்கை

Update: 2023-11-06 10:43 GMT

பொங்கலுக்கு இலவச மண்பானை வழங்க கோரிக்கை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழகத்தில் மண்பாண்ட தொழில் அழியாமல் காக்க பொங்கலுக்கு இலவச மண்பானை வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை மண்பாண்ட தொழிலாளர்களின் நலன் கருதி, தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானை, அடுப்பு ஆகியவற்றையும் சேர்த்து வழங்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம், மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் குமார், மாரிமுத்து ஆகியோர் தலைமையில் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் விவசாயிகளின் நலன் கருதி அரிசி, பருப்பு, சர்க்கரை, கரும்பு ஆகிய பொருட்களும், நெசவாளர்களின் நலன் கருதி வேட்டி, சேலை அதேபோல், அழிந்து வரும் மண்பாண்ட தொழிலினை காத்திட பொங்கலிட ஒரு அடுப்பும், ஒரு பானையும் அரசு கொள்முதல் செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் இணைத்து மக்களுக்கு வழங்கினால், மட்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் மட்பாண்ட தொழிலும் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News