மினி தீயணைப்பு லாரி வழங்க கோரிக்கை
மினி தீயணைப்பு லாரி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-11 13:24 GMT
கோப்பு படம்
வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு மினி தீயணைப்பு லாரி வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலக்குண்டு ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளன. இதில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வத்தலக்குண்டு கடை வீதி உள்பட பல வீதிகள் குறுகலாகவே உள்ளது.
இதனால் தீ விபத்து சமயங்களில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சில இடங்களில் தீயை அணைக்க குறிப்பிட்ட நேரத்தில் செல்ல தாமதம் ஏற்பட்டு தீயானது வீட்டை எரித்து நாசமாக்கி விடுகிறது. எனவே தீயணைப்பு துறையினருக்கு மினி தீயணைப்பு லாரி வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.