ஸ்ரீ ஆதி சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி திருப்பணி தொடங்க கோரிக்கை

ஸ்ரீ ஆதி சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி திருப்பணி தொடங்க இந்து சமய அறநிலை துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-29 07:57 GMT

பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை பெற்று திகழும் ஏராகரம் கந்தநாத சுவாமி கோயில் என்கிற ஸ்ரீ ஆதி சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி திருப்பணி தொடங்க இந்து சமய அறநிலை துறைக்கு கோரிக்கை... முருகனின் அறுபடை ஸ்தலங்களில் நான்காவது ஸ்தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை ஆகும். இதற்கு அருகில் உள்ள ஏராகரம் என்ற ஊரில் மிகப் பழமையான கந்தநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில்தான் ஆதி சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில் என்று பக்தர்கள் இன்று வரை சொல்லி வருகிறார்கள் .. இத்திருக்கோயிலை பழமை மாறாமல் அதாவது இக்கோவிலை இடிக்காமல் எப்படி இருந்ததோ அதேபோல் திருப்பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏனெனில் இக்கோயில் கூட்டம் அதிகம் வருவதாக கோவிலில் இடித்து பெரிது படுத்த வேண்டும் என்ற நோக்கில் வதந்திகள் வருகிறது. அதேபோல் இக்கோவிலின் ஐம்பொன் சிலைகள் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அதன் பற்றி விவரங்கள் இந்து சமய அறநிலைத்துறை தெளிவுபடுத்த வேண்டும் இது குறித்து இக்கோவில் அதிகாரிகளுக்கு பலமுறை தொடர்பு கொண்ட போது என்னது அழைப்பினை எடுக்கவில்லை.

தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மற்றும் இக்கோவில் ஆணையர் அவர்களும் விரைந்து இக்கோயில் திருப்பணி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு இக்கோயில் சுவாமி விக்கிரகங்களை இக்கோவிலில் வைத்து வழிபடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா சார்பில் கேட்டுக்கொள்கிறேன். Er. இராம நிரஞ்சன் மாநிலச் செயலாளர் மாநிலத் தலைவர் - ஆலய பாதுகாப்பு பிரிவு அகில பாரத இந்து மகா சபா.

Tags:    

Similar News