பெயர் விலாசம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு
அரசு மருத்துவமனையில், பெயர் விலாசம் தெரியாத முதியவர் சடலம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 05:41 GMT
அரசு மருத்துவமனையில் பெயர் விலாசம் தெரியாத முதியவர் சடலம்
அரசு மருத்துவமனையில் பெயர் விலாசம் தெரியாத முதியவர் சடலம்
பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள கோவிலில், பெயர் விலாசம் தெரியாத, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், பிப்ரவரி 6ம் தேதி இரவு அங்குள்ள சாமி சிலை முன்பு உயிரிழந்து கிடந்தார். இரவு பணியில் இருந்த மருத்துவமனை பாதுகாவலர் லட்சுமணன், அதைக்கண்டு போலீசாருக்கு தகவல். கொடுத்தார். இதனைத்தொ டர்ந்து பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று முதியவர் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அங்குள்ள பிணவறையில் வைத்து உயிரிழந்த முதியவர் யார்? எந்தஊரை சேர்ந்தவர்? மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தபோது உடல்நலக்குறைவால் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.