10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு விடிய விடிய காத்திருந்த அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-05 04:50 GMT

 காத்திருப்பு போராட்டம்

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. பேரிடர் மேலாண்மை துறையில் 3 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாயத்துறை அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 7-வது நாளாக பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மாலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து இரவு சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறியதாவது:- வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன்பு இன்று (நேற்று) இரவு முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்கி உள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்தாலும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News