கலெக்டர் அலுவலகத்தில் கிரிக்கெட் விளையாடிய வருவாய் அலுவலர்கள்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் இரவு நேரத்தில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் கிரிக்கெட் விளையாடினர்.

Update: 2024-03-07 04:21 GMT
குமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கிரிக்கெட் விளையாடிய வருவாய் அலுவலர்கள்

தமிழக வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  கடந்த மாதம் 22ஆம் தேதியிலிருந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.     கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்க சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 22, 23 மற்றும் 26 ஆகிய நாட்கள் காத்திருப்பு போராட்டம், 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.        

போராட்டத்தை தீவிர படுத்தும் விதமாக கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் இரவு பகலாக காத்திருப்பாட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு நடந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் இரவு நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தின் முன் பகுதியில் கிரிக்கெட் விளையாடினர். பேட் மற்றும் பந்தை வாங்கி வந்து அனைவரும் சேர்ந்து உற்சாகமாக விளையாட்டினார். சிலர் இறகு பந்தும் விளையாடினர்.  இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News