வருவாய் கிராம ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
வருவாய் கிராம ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செங்கமலை வரவேற்றுப் பேசினார். வாரிசு அடிப்படையிலான வேலைவாய்ப்பை திரும்ப வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட 14-ம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆறு கட்ட போராட்டங்கள் நடத்துவது என நீலகிரியில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு மூன்று கட்ட போராட்டங்கள் முடிந்த நிலையில், தற்போது நான்காம் கட்ட போராட்டமாக வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களில் தர்ணா போராட்டம் நடைபெறும். தமிழ்நாடு அரசு கனிவோடு எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத்தின் மாநில செயலாளர் முருகேசன் கேட்டுக் கொண்டார். இதே கருத்தை மாவட்ட செயலாளர் செங்கமலை கேட்டுக் கொண்டார். இப் போராட்டத்தில் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம ஊழியர்கள் கலந்து கொண்டனர்.