கறம்பக்குடி சாலையில்: சாலை மறியல் போராட்டம்!
கறம்பக்குடி சாலையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே குளத்தூர் நாயக்கர் பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரூ. 6 லட்சம் மதீப்பீட்டில் பாலம் கட்டும் பணி தொடங்கிய நிலையில் கடந்த மூன்று மாத காலங்களாக பாலம் கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பாலத்தை கடந்து தான் அரசு உயர்நிலைப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளி கால்நடை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தற்போது மழை காலம் என்பதால் பாலம் கட்டும் பணி தடைபட்டு இருப்பதால் மழை நீர் தேங்கி செல்வதற்கு வழி இல்லாமல் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அவதியுற்று வருவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரி குளத்தூர் நாயக்கர் பட்டி தஞ்சை கறம்பக்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ஒ ரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல நேரமாகிய காரணத்தால் அரசு பேருந்து மாற்று வழியில் செல்ல முயன்ற பொழுது பழுதடைந்து அரசு பேருந்தை மாணவர்கள் தள்ளிச் செல்லுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்களிடம் கந்தர்வகோட்டை காவல்துறையினர் குளத்தூர் நாயக்கர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.