லாரி மோதி சாலை பராமரிப்பு தொழிலாளி பலி

சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே பணியில் ஈடுப்பட்டிருந்த சாலை பராமரிப்பு தொழிலாளி லாரி மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-11 07:58 GMT

தொழிலாளி பலி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது 33). இவர் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் சாலை பராமரிப்பு ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மல்லூர் அருகே கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ராஜாராம் காலனி பகுதியில் சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஜெகதீஸ்வரன் அந்த வழியாக வந்த வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லுமாறு கையில் சிகப்பு கொடியை காட்டி அனுப்பி கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வேகமாக சென்ற சரக்கு லாரி ஜெகதீஸ்வரன் மீது மோதியது. இதில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெகதீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News