சாலை பாதுகாப்பு வாகன விழிப்புணர்வு பேரணி.
தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி நடந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் நீதிபதிகள் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்து பேரணியாகச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு மாத இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு மாதம், 'சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு' என்ற கருப்பொருளை மையப்படுத்தி சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கரூர் சாலை. அலங்கியம் சிக்னல். உடுமலை ரவுண்டானா. பேருந்து நிலையம். அமராவதி ரவுண்டானா. புறவழிச் சாலை வழியாக வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அதில்,ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது, செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது. போக்குவரத்து சிக்னலை கவனித்து வாகனத்தை இயக்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், முன்னதாக சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் குற்றவியல் நடுவர் பாபு.மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி.தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார்.மூலனூர் தாராபுரம் காவல் ஆய்வாளர் அருள், தாராபுரம் காவல் ஊதவி ஆய்வாளர் முத்துக்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.