தூத்துக்குடியில் சாலைப் பணிகள்: மேயர் ஆய்வு!

தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் நடைபெற்று முடிந்த புதிய தார் சாலையினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Update: 2024-02-20 06:09 GMT

மேயர் ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய சாலை மற்றும் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக டுவிபுரம் பகுதியில் நடைபெற்று முடிந்த புதிய தார் சாலையினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அப்போது அவர் கூறுகையில், "இந்த சாலையானது விவிடி மெயின் ரோடு மற்றும் ஜெயராஜ் சாலை இணைக்கும் ஒரு பிரதான சாலையாகும். தூத்துக்குடி மாநகரப் பொறுத்தவரை பல்வேறு சாலைகள் என்டு என்டு என்ற முறையில் அகலப்படுத்தி போடப்பட்டு வருகின்றது. அதுபோல இந்த சாலையும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ வணிக நிறுவனங்களின் முன்போ சாலையின் ஓரத்தில் மணல்களை மேடு போல் குவித்து வைப்பதை தவிர்த்து பேவர் பிளாக் அல்லது சிமெண்ட் தளங்களை சாலையின் மட்டத்திற்கு போட்டுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றார்.  ஆய்வின்போது, திமுக பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் அவர்கள், பகுதி செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், வட்ட கழக நிர்வாகி அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News