பொரசக்குறிச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம்மாற்ற சாலைமறியல்

கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றக் கோரி சாலை மறியல் நடந்தது.

Update: 2024-02-15 04:41 GMT


கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடம் மாற்றக் கோரி சாலை மறியல் நடந்தது.


கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக கெங்கையம்மன் கோவில் அருகே பள்ளம் தோண்டும் பணி துவங்கியது. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்தால், சித்திரை மாத அன்னப்படையல் நிகழ்ச்சியின் போது, மக்களுக்கு அன்னதானம் வழங்க சிரமமாக இருக்கும். எனவே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர், நேற்று மதியம் 2:00 மணியளவில் பொரசக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே, விருகாவூர் - அசகளத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தற்காலிக பணி நிறுத்தம் செய்வதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மொபைல் போனில் தெரிவித்ததையடுத்து, மதியம் 2:30 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
Tags:    

Similar News