வாணியம்பாடி அருகே கோவில்களில் உண்டியல்கள் கொள்ளை
வாணியம்பாடி அருகே கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோவில்களில் 2 உண்டியல்கள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பலாற்றங்கரையில் பிரசித்தி பெற்ற பழமையான பாலமுருகன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் முக்கிய விஷேச நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம் இந்த நிலையில் நேற்று தை அமாவாசை முன்னிட்டு தர்பணம் கொடுக்க சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் வந்து சென்றுள்ளனர். இரவு பூசாரி குணசேகரன் கோவிலை பூட்டி சென்றுள்ளார்.
நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவிலின் சுற்று சுவரை ஏறி குதித்து பின்புறம் இருந்த கேட்டு பூட்டை உடைத்து கோவிலில் இருந்த இரண்டு முன் பக்க கேட்டுகளையும் உடைத்து கோவில் இருந்த 2 உண்டியல்களை தூக்கி சென்றுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் அபிஷேகம் செய்ய இன்று அதிகாலை 4:30 மணிக்கு பூசாரி கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது உண்டியல் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்து கிராம மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக இந்த கோவில் உண்டியல் பணம் எடுக்காமல் உள்ளதால் அதில் சுமார் ரூ 50000 வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. கோயிலின் பூட்டை உடைத்து உண்டியல் திருடி சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.