பள்ளி மாணவர்களுக்கு ரோபோ பயிற்சி பட்டறை!

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் எந்திரனியல் (ரோபோ) பயிற்சி பட்டறை நடந்தது.

Update: 2024-05-15 12:18 GMT

வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் எந்திரனியல் (ரோபோ) பயிற்சி பட்டறை நடந்தது.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் எந்திரனியல் (ரோபோ) பயிற்சி பட்டறை நடந்தது. இதில் 6 முதல் பிளஸ்-1 படிக்கும் 24 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட அறிவியல் அலுவலர் (பொறுப்பு) ரவிக்குமார் தலைமையில் பயிற்சியாளர்கள் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்

. பயிற்சி பட்டறையில் ரோபோவின் பாகங்களை தொகுத்து வடிவமைப்பது, அவற்றிக்கு கட்டளைகள் கொடுப்பது உள்பட பல்வேறு பயிற்சிகள் மற்றும் மாணவர்களுக்கு ரோபோவில் உள்ள பாகங்கள் என்ன?அவற்றின் செயல்பாடுகள், அவற்றை தொகுத்து வடிவமைப்பது, கட்டளைகள் பிறப்பிப்பது உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து மாணவர்கள் ரோபோக்களை ஆர்வத்துடன் இயக்கினார்கள். இந்த பயிற்சி பட்டறை 2-வது நாளாக இன்றும் நடந்தது.

Tags:    

Similar News