ஆண் குழந்தை விற்பனை - காவல்துறையினர் விசாரணை
முறையான ஆவணங்கள் இன்ரி குழந்தையை வளர்ப்பதாக கிடைத்த தகவலை அடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விசாரணை மேற்கொண்டார்
Update: 2023-12-23 11:38 GMT
திண்டுக்கல் அனுமந்திராயன் கோட்டையை சேர்ந்தவர் பால்ராஜ், மனைவி அருள்செல்வி. இவர்களுக்கு குழந்தை இல்லை. 2020 நவம்பரில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்படும் பவானி கணேசன் மருத்துவமனையில் ரூ.2 லட்சம் கொடுத்து ஆண் குழந்தையை வாங்கினர். முறையான ஆவணங்களின்றி குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமாருக்கு டிச.12 ல் தகவல் வந்தது.பால்ராஜ் தம்பதியிடம் விசாரணை நடத்தியபோது புகார் உறுதியானது. இதையடுத்து தம்பதிக்கு குழந்தையை விற்றதாக டாக்டர் பவானி கணேசன் மீது வடக்கு போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் புகாரளித்தார். எஸ்.ஐ,மனோகரன் விசாரிக்கிறார்.