தபால் நிலையத்தில் தங்க பத்திரம் விற்பனை

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் தலைமை தபால் நிலையங்களில் நடைபெறும் தங்க பத்திரம் விற்பனையில், பொதுமக்கள் முதலீடு செய்து பயனடையலாம் என கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்

Update: 2024-02-12 03:28 GMT

அஞ்சலகம் 

கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களில், இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க பத்திரம் முதலீட்டு திட்ட விற்பனை நாளை 12ம் தேதி முதல் துவங்குகிறது. நேரடி தங்கத்தை கிராம் கணக்கில் வாங்குவது போல, தங்க பத்திரத்தில் முதலீடு செய்ய முடியும். முதலீடு செய்த பணத்தின் மதிப்பு, சந்தை விலைக்கு ஏற்றவாறு அதிகரிக்கும். ஒரு கிராம் விலை 24 கேரட் 6,236 ரூபாய். தனிநபர் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யலாம். தொண்டு நிறுவனங்கள் நிதியாண்டிற்கு 20 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகளாகும். முதலீட்டாளருக்கு தேவை இருப்பின் 5 முதல் 7 ஆண்டுகளில் திட்டத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். முதலீடு செய்தவர்களுக்கு ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும். இந்த வட்டித் தொகை 6 மாதத்திற்கு ஒரு முறை பெற்றுக்கொள்ளும் வசதியும், தங்க பத்திரத்தின் பேரில் வங்கிகளில் கடன் பெறும் வசதியும் உள்ளது. நாளை முதல் வரும் 16ம் தேதி வரை 5 நாட்கள் மட்டுமே தங்க பத்திர விற்பனை நடைபெறும். எனவே, பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிறப்பு தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு விற்பனை அலுவலர் சதீஷ் 7373579527 மற்றும் நீலகண்டன் 80722 94253 ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Tags:    

Similar News