சேலம்: குடும்பத்தகராறு - ஏரியில் குதித்து பெண் தற்கொலை
Update: 2023-11-27 05:14 GMT
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே மின்னக்கல், வடுகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பொருட்களை ஜெயலட்சுமி அடகு வைத்தது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி வீட்டில் இருந்து திடீரென மாயமானார் அவரை கோபாலகிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை பாப்பாரப்பட்டி ஏரியில் ஜெயலட்சுமி சடலமாக கிடப்பது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பெயரில் ஆட்டையாம்பட்டி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக ஏரியில் குதித்து ஜெயலட்சுமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.