சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் தேசிய அளவில் சாதனை
சேலம் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் தேசிய அளவில் சாதனை
By : King 24x7 Website
Update: 2023-12-14 08:19 GMT
சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் முதுகலை இரண்டாமாண்டு பயிலும் பொருளியியல் மாற்றுதிறனாளி மாணவி ஜோதி தாய்லாந்தில் நடைபெற்ற உலக எமலிட்டி விளையாட்டு 2023ல் இந்திய அணியில் இடம் பெற்று மூளை முடக்கு வாதம் பிரிவில் (T35) குண்டு எறிதலில் வெண்கலம் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். இதுமட்டுமல்லாமல் மாநில மற்றும் தேசிய அளவில் 100,மீ, 200.மீ, 400.மீ, மற்றும் குண்டு எறிதல் பாரா சாம்பியன் போட்டியில் பல பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் இதே கல்லூரியில் வணிகவியல் முதலாமாண்டு பயிலும் பாயல், என்ற மாணவி தென்காசியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு தேசிய அளவிலான வலு தூக்கும் போட்டிால் 76கிலோ எடை பிரிவில் சப்ஜூனியர் பிரிவில் 3 தங்கம் வென்றதுடன், தேசிய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வென்றார். மேலும் அன்மையில் பெங்களுருவில் நடைபெற்ற தேதிய அளவிலான பெஞ்ச் பிரஸ் சப்ஜூனியர் பிரிவில் தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றார். சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்களை குவித்த மாணவிகளை கல்லூரி முதல்வர் காந்திமதி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் இம்மாணவிகளை மூத்த பேராசிரியர்கள் கீதா, பூங்கோதை, உடற்கல்வி இயக்குநர் சிவகுமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.