சேலம் புதிய பஸ் ஸ்டாண்டு அருகே கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

Update: 2023-12-25 09:38 GMT

கொள்ளை

சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் ஆரி (வயது 28). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீரபாண்டியார் நகரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார். மறுநாள் சென்று கடையை பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த செல்போன் மற்றும் லேப்டாப் திருடு போயிருக்கு தெரிய வந்தது. இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News