மாற்றுத்திறனாளிக்கு ரூ.2.25 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கல்
சேலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.2.25 கோடி மதிப்பில் 475 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உபகரணங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
சேலம் சோனா கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த விழாவில் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் 475 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதுதவிர சேலம் மாநகராட்சியின் சார்பில் பொதுசுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிக்காக ரூ.2 கோடியே 15 லட்சத்தில் 12 புதிய டிராக்டர்கள், டிரெய்லர்களும், 36 மாநகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்புகளுக்கான ஆணை ஆகியவற்றை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இதையடுத்து சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மகாபலிபுரத்திற்கு ஒரு புறநகர பஸ், ஏற்காடு அடிவாரத்திற்கு 2 சாதாரண கட்டண நகர பஸ்கள் என மொத்தம் 3 புதிய வழித்தடங்களில் பஸ் சேவைகளை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார்கள்.