சேலம் பள்ளி மாணவன் மீண்டும் மாயம்
சேலம் நெத்திமேட்டை சேர்ந்த பள்ளி மாணவன், இரண்டாவது முறையாக நேற்று காணாமல் போனதால், பெற்றோரின் புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Update: 2023-12-22 14:48 GMT
சேலம் நெத்திமேடு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் லெனின்குமார்(15), குகையில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் சமீபத்தில் ரூ.14ஆயிரத்துடன் காணாமல் போனான். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் அவனை மீட்டு தொன்போஸ்கோ இல்லத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவனை அவரது பெற்றோர் அழைத்து சென்றனர். இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற குமார் மீண்டும் மாயமானான். அவனை எங்கு தேடியும் கிடைக்காததால் அன்னதானப்பட்டி போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.