பள்ளிக்கு சென்ற 2 மாணவர்கள் மாயம் - கலக்கத்தில் பெற்றோர்
மாணவர்களை காணவில்லை என்று பெற்றோர் புகார்
Update: 2024-02-18 11:19 GMT
சேலம் அருகே பள்ளிக்கு சென்ற இரு மாணவர்கள் காணவில்லை என்பதால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் சின்னகொல்லப்பட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் சபரிநாதன்(14). அதே பகுதியை சேர்ந்தவர் சிவா மகன் இளவரசன் (14). இவர்கள் இருவரும் கோம்பைபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி பள்ளிக்குச் சென்ற இருவரும் மாலை வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் மயமானது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவர்களை தேடி வருகின்றனர்.