சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க கூட்டம்
சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 09:12 GMT
சேலம் மண்டல முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டம் தமிழ்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
செயலாளர் மூர்த்தி வரவேற்று பேசினார். கூட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும்.
முடி திருத்தும் தொழிலாளர்கள் அனைவரையும் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.