அன்னாசி பழங்களின் விற்பனை தீவிரம்
திருவாரூரில் அன்னாசி பழங்களின் விற்பனை தீவிரமாக நடக்கிறது.
Update: 2023-12-21 09:00 GMT
திருவாரூரில், அன்னாசி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படங்கள் ரூபாய் 20 முதல் ரூபாய் 60 வரை விற்கப்படுகிறது. திருவாரூரில் கேரளா அன்னாசிப்பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பழங்கள் ஒன்று ரூபாய் 20, 30 ஆகிய விலையிலும், மூன்று பழங்கள் ரூபாய் ஐம்பது விலையிலும், இரண்டு பழங்கள் ரூபாய் 60 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் அன்னாசி பழங்களை வாங்கி செல்கின்றனர்.