தடை செய்யப்பட்ட 22,000 கிலோ பேரியம் நைட்ரேட் எனும் பச்சை உப்பு பறிமுதல்

சிவகாசி அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 22,000 கிலோ பேரியம் நைட்ரேட் எனும் பச்சை உப்பு பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-07-03 13:51 GMT

சிவகாசி அருகே பட்டாசு தயாரிக்கும் ஆலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 22,000 கிலோ பேரியம் நைட்ரேட் எனும் பச்சை உப்பு பறிமுதல் செய்யப்பட்டது.  

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு குழாய் தயாரிக்கும் ஆலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட 22,000 கிலோ பேரியம் நைட்ரேட் எனும் பச்சை உப்பை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆலைக்கு சீல் வைத்து சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) பயன்படுத்தி தயாரிக்கப்படும் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவதாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாடு முழுவதும் பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) தடை விதித்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ள நிலையில் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப் படுகின்றனவா என மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட குழுக்கள் அவ்வப்போது மாவட்ட முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு மூலப்பொருள் சேமிக்கும் ஆலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் சிவகாசியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு வெடி பொருளுக்கு பயன்படும் குழாய் தயாரிக்கும் ஆலை உள்ளது.

அந்த ஆலையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மகேந்திரனின் குடோனில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி தாசில்தார் திருப்பதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் ரகசிய தகவலின் அடிப்படையில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி தாசில்தார் திருப்பதி மகேந்திரன் குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேற்கொண்ட ஆய்வில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் (பச்சை உப்பு) 450 மூட்டைகளில் 22 ஆயிரம் கிலோ பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22,000 கிலோ பச்சை உப்பு பறிமுதல் செய்யப்பட்டு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் ஆலையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News