சண்முக நதியில் குப்பை கூழங்கால் அவதி
சண்முக நதியில் குப்பை கூழங்கால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முக நதி ஆற்றுப்பாலம் அருகே குப்பை கிடங்காக மாறியுள்ளது. இந்த குப்பை கிடங்கு தீப்பிடித்து எரிவதால் சாலையில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் ஒளியில் இருசக்கர வாகனங்கள் தடுமாறி விபத்து ஏற்படுவதற்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பக்தர்கள் சாலையில் நடைபயணமாக வருவதால் முன்னெச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: புண்ணிய நதி என்று நாங்கள் சண்முக நதியில் குளிக்க வருகிறோம்.
அந்த புண்ணிய நதியில் குளித்தால் மனம் புண்படும் நிலைமைக்கு சென்று விட்டது. இருக்கும் குப்பைகளை இங்கு வந்து கொட்டுகின்றனர். இதனால் சமூக நதியை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.