ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வாகனங்களின் ஆய்வு
ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த 264 தனியார் பள்ளி வாகனங்களின் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டன.
ராசிபுரம் எஸ் ஆர் வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி வாகனங்களின் ஆய்வு செய்யப்பட்டது. 30க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 264 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டன. நாமக்கல் (வடக்கு) வட்டாரப்போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இராசிபுரம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுலவகத்திறக்கு உட்பட்ட 30 பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. எஸ்.ஆர்.வி மாணவர்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது . இந்த ஆய்விற்கு வருவாய் கோட்டாட்சியர் ஆர்.பார்த்திபன் தலைமை தாங்கினார். ஆய்வில் காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) திருமதி. மரகதம், வட்டாட்சியர் சரவணன், தீயணைப்பு துறை அலுவலர் வே. பலகாரன் ராமசாமி, வட்டாரப்போக்குவரத்து அலுவலர் E.S.முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி. து.நித்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பள்ளி வாகனங்களின் பதிவு சான்று, காப்பு சான்று, அனுமதி சீட்டு, ஒட்டுநர் உரிமம், தீயணைப்பு கருவி, மருத்துவ முதல் உதவிப் பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அரசின் விதிமுறைப்படி 22 அம்சங்கள் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாகனங்களில் உள்ள குறைகளை கண்டறிந்து சுட்டிக்காட்டி ஆய்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் குறைகளை சரிசெய்து மறு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தனியார் பள்ளிகளை சார்ந்த 272 வாகனங்களில் 264 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 8 வாகனங்கள் ஆய்விற்கு வரவில்லை. இதில் 10 வாகனங்களில் குறைகள் கண்டுப்பிடிக்கப்பட்டு குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்விற்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வு பணிகள் குறித்து வட்டாரப்போக்குவரத்து அலுவலர் E.S.முருகேசன் அவர்கள் கூறியதாவது அரசு அறிவித்துள்ள 22 அம்சங்கள் பள்ளி வாகனங்களில் உள்ளதா என முழுமையாக செய்யப்பட்டப்பின் பள்ளி வாகனங்கள் சாலையில் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை சரிசெய்து மறு ஆய்வு செய்தபின் தான் அனுமதி வழங்கப்படும். மேலும் 394 பள்ளி வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களிடம் ஓட்டுநர் பள்ளி வாகனத்தை பராமரிக்கும் முறை, அவரது கடமைகள், உதவியாளர்களின் பங்கு என்ன என்பதை குறித்து தெளிவுரை வழங்கப்பட்டது. ஆய்வின் ஒரு பகுதியாக ராசிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயணைப்பான் கருகியை பயன்படுத்தும் முறை பற்றி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். தொடர்ந்து தீ தடுப்பு முறைகள் குறைத்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், கேஸ் பயர், எலக்ட்ரிக் பயர், ஆயில் பயர் ஆகியற்றினை அணைப்பதற்குரிய செயல் விளக்கத்துடன் எடுத்துக் கூறி ஓட்டுனர்களுக்கு விளக்கம் அளித்தனர். போக்குவரத்து துறையின் சார்பில் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மற்றும் ஓட்டுநர்களின் உடல் நலத்தை பேணும் வகையில் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை, இ.சி.ஜி, இரத்த பரிசோதனை, இரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகள் மற்றும் பிஸியோதரபி சிகிச்சை, இயண்முறை சிகிச்சை அளிக்கப்பட்டது.