குமரியில் தொடர் சூறைக்காற்று மீன் தொழில் பாதிப்பு - 15 நாட்களாக முடக்கம்

குமரியில் தொடர் சூறைக்காற்றால் 15 நாட்களாக மீன் தொழில் பாதிப்பு.

Update: 2024-01-09 05:47 GMT
மீன் பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள்
கன்னியாகுமரி  மாவட்டத்தை பொறுத்தவரையில் தேங்காப்பட்டணம், குளச்சல், முட்டம் மீன்பிடித் துறைமுகங்களை தங்குதளங்களாகக் கொண்டு சுமார் 1800 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டு மரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன்பிடித் தொழில்  செய்து வருகின்றன. கடந்த கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் அனைவரும் கரை திரும்பினர். கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடிவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தயாரானார்கள். ஆனால் தென் தமிழக கடலோரப் பகுதியில் கடந்த 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் விசைப்படகு மீனவர்கள் எவரும் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய கடல் தகவல் சேவை மையம் எச்சரித்துள்ளது. இது தவிர குமரி கடல் பகுதியில் நாளை புதன்கிழமை வரை 45 கிலோமீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் பலன்த காற்று  வீசும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது .        இதனால் விசைப்படகுகள் தொடர்ந்து அந்தந்த துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மீன் பிடிக்க செல்ல முடியாததால் குமரி மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் பாதிப்படைந்துள்ளது.
Tags:    

Similar News