தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளை தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

Update: 2024-05-26 14:44 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளை தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.


செங்கல்பட்டு மாவட்டம்,நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் கே.கே. நகர்., பகுதிகளில், நேற்று மாலை 3:10 மணியளவில், தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். மழை மற்றும் புயல் காலங்களில் கூடுவாஞ்சேரி, சீனிவாசபுரம் கே.கே. நகர்., பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் மழைநீர் அதிகளவில் தேங்கி, அப்பகுதியினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படுகிறது.

இதை தொடர்ந்து, இப்பகுதியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் படி, கலெக்டர் உத்தரவின் போரில் நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் மழை நீர் சீராக செல்ல வசதியாக, எட்டு இடங்களில் சிறிய பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கப்பட்டு, பணிகள் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தன. இதை தொடர்ந்து, இனி வரும் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் சீராக செல்லுமா, தற்போதைய கள நிலவரம் குறித்து நேரில் வந்து தலைமை செயலர் ஆய்வு மேற்கொண்டார். உடன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு மாவட்ட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சித்ரா, மண்டல செயற்பொறியாளர் மனோகரன், கமிஷனர் தாமோதரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags:    

Similar News